ஒரு ஜாதகத்தின் பலன்களை நிர்ணயிப்பதில் யோகங்களின் பங்கு அளப் பரியது. அந்தவகையில் ஒருவருக்கு குபேர சம்பத்து வழங்கும் யோகங்களில் ஒன்று புஷ்கராம்சம். ஜோதிடத்தில் பல சூட்சம விதிகள் ஒன்று புஷ்கராம்சம். புஷ்கரா என்றால் தாமரை பூ, அதிக ஆற்றல், மத்தளத்தின் தோல், குட்டை போன்ற பொருள் தரும். இதனை வைத்து ஒருவரது அந்தஸ்து மற்றும் உயர் நிலையை அறியலாம். ஒருவருடைய ஜாதகத்திலுள்ள கிரகங்கள் எவ்வளவு பலவீனமாக இருந்தாலும் அது ஜாதகருக்கு வேறுவகையில் கெடுதல் செய்தாலும் பொருளாதாரத்தில் நல்ல நிலைமையிலேயே வைத்திருக்கிறது. இதற்கான காரணங்களை ஆராய்ந்தபோது அந்த கிரகம் புஷ்கராம்சத்தில் உள்ளது.
புஷ்கராம்சத்தில் 12 ராசிகளில், ஒவ்வொரு ராசியிலுமுள்ள ஒரு குறிப்பிட்ட இரண்டு நட்சத்திர பாதம் அடங்கும். புஷ்கராம்ச யோகத்தைப் பற்றி எளிமையாகக் கூறினால், கேது, செவ்வாய், புதன் கிரகங்களின் நட்சத்திரங்கள் புஷ்கராம்சத்தில் அடங்காது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/pushkaram_0.jpg)
மற்ற கிரகங்களான சூரியனின் நட்சத்திர 1, 4-ஆம் பாதம் (கார்த்திகை, உத்திரம், உத்திராடம்), சந்திரனின் 2-ஆம் பாதம் (ரோகிணி, அஸ்தம், திருவோணம்), குருவின் 2, 4-ஆம் பாதம் (புனர்பூசம், விசாகம், பூரட்டாதி); சுக்கிரனின் 3-ஆம் பாதம் (பரணி, பூரம், பூராடம்), சனியின் 2-ஆம் பாதம் (பூசம், அனுஷம், உத்திரட்டாதி); ராகுவின் 4-ஆம் பாதம் (திருவாதிரை, சுவாதி, சதயம்) புஷ்கராம்ச கட்டத்தில் அடங்கும்.
மேலே குறிப்பிட்ட நட்சத்திரங் கள் பாதங்களில் கிரகங்கள் அமரும்பொழுது புஷ்கராம்ச யோகப் பலனை கொடுக்கும். சில ஜாதகத்தில் கிரகங்கள் பலவீனம் என்று நினைத்தால், அந்த கிரகங்கள் படிப்படியான உயர்வைக் கொடுத்து ஜாதகரை பொருளாதாரத்தில் நல்ல உயர்ந்த நிலைமையை அடைய வைத்திருக்கிறது. புஷ்கராம்சத்தால் ஜாதகருக்கு ஏற்படும் யோகங்கள் பல.
லக்னம், லக்னப்புள்ளி புஷ்கராம்ச நட்சத்திர பாதத்தில் அமர்ந்துவிட்டால் தொடர்ந்து அவர்களுக்கு யோகம் அதிகரித்துக்கொண்டு இருக்கும். லக்னம், லக்னாதிபதி லக்னத்தில் ஆட்சிபலம் பெற்று புஷ்கராம்சம் பெற்றிருந்தால் ஜாதகருக்கு உலகப்புகழ் பெறும் அமைப்பு உண்டு.
ஒருவருடைய ஜாதகத்தில் இரண்டு அல்லது அதற்கும் மேற்பட்ட கிரகங்கள் புஷ்கராம்சத்தில் நின்றால் அந்த ஜாதகர் மதிக்கதக்கவராகவும், அதிர்ஷ்டம் உடையவராகவும் இருப்பார். அவர் கடவுளின் அருள்பெற்ற ஜாதகராக திகழ்வார்.
ஒருவருடைய ஜாதகத்தில் கிரகங்கள் நீசம் பகை பெற்று வலு இழந்தாலும் அந்த கிரகம் புஷ்கார நட்சத்திர சாரத்தில் இருந்தால் அது நல்ல நிலையை ஜாதகருக்கு கொடுக்கும். புஷ்கராம்சத்திலுள்ள கிரகங்கள் ஆட்சி, உச்சம், நட்பு பெற்று கேந்திர மற்றும் திரிகோணங்களில் இருந்தால் ஜாதகருக்கு இன்னும் அதீத யோகப் பலன்களைத் தரும்.
யோக கிரகங்கள் புஷ்கராம்சத்தில் இருந்து அது கேந்திர, திரிகோணம் பெற்றால் மாபெரும் யோகத்தை நிச்சயம் வழங்கும்..
யோகாதிபதிகள் இந்த புஷ்கராம்சத்தில் இருந்தால் மாபெரும் யோகத்தைத் தனது தசாபுக்திகளில் அளித்து உறுதியாகப் பெரிய பதவி, செல்வம், மகிழ்ச்சியை நிச்சயமாகத் தருவார்கள்.
நான்காம் அதிபதி ஐந்திலோ, ஐந்தாம் அதிபதி நான்கிலோ புஷ்கராம்சத்தில் இருந்தால் தேசிய அளவில் புகழ் உண்டு.
ஒன்பதாம் அதிபதி பத்திலோ, பத்தாம் அதிபதி ஒன்பதிலோ இருந்தால் உலகப் புகழும் அடைவார்கள்.
தசா புக்தி காலங்களில் புஷ்கராம்ச சுபக்கிரகங்கள் அதிக பலனை அள்ளித்தரும். கோட்சார காலங்களில் சுபக்கிரகங்கள் புஷ்கராம்ச நட்சத்திர பாதத்தில் செல்லும்பொழுது அதிக நன்மை தரும்.
இத்தகைய சிறப்பு அம்சம் நிறைந்த புஷ்கராம்சத்தில் சாதாரண குடும்பத்தில் பிறந்தவரையும் உலகப்புகழ் பெறச்செய்யும் என்பதை ஒரு உதாரண ஜாதகத்துடன் பார்க்கலாம்.
இது நமது பாரதப் பிரதமர் திரு. நரேந்திரமோடி அவர்களின் ஜாதகம். 17-9-1950 அன்று காலை 10.00 மணிக்கு வாட்நகர், குஜராத்தில் பிறந்தவர். சாதாரண குடும்பத்தில் பிறந்தவர். ஜென்ம லக்னம் துலாம். ஜென்ம நட்சத்திரம் அனுஷம் 2 அவருக்கு லக்னப்புள்ளி சுவாதி 4 (புஷ்கராம்சம்)ஜென்ம நட்சத்திரம் அனுஷம் 2 எனும் சனியின் நட்சத்திரம். புஷ்கராம்சம் பூர்வபுண்ணிய ஸ்தானாதிபதி, பதவி ஸ்தானாதிபதி சனிபகவான் லாபாதிபதி சூரியனின் உத்திரம் 1 (புஷ்கராம்சம்). 10-ஆம் அதிபதி சந்திரன் அனுஷம் 2 எனும் புஷ்காரம்ச பாதத்தில் அமர்ந்திருப்பது மேலும் சிறப்பு. அவரின் ஜாதகத்தில் 5, 10-ஆம் அதிபதிகள் புஷ்கராம்ச நட்சத்திரத்தில் அமர்ந்தது உலகப்புகழ் பெறவைத்தது. அதனால்தான் சாதாரண குடும்பத்தில் பிறந்த அவர் வெற்றி மழையில் நனைந்து வருகிறார். உலகெங்கும் அவரது புகழ் பரவி அந்தஸ்து, கௌரவம் உயர்ந்து கொண்டே செல்கிறது.
லக்னப்புள்ளி சுவாதி 4 ராகுவின் நட்சத்திரம். அவருடைய சுய ஜாதகத்தில் ராகு உப ஜெய ஸ்தானமான எதிரியை வெல்லக்கூடிய 6-ஆமிடத்தில் நிற்பதால் எதிரியை வெல்லும் வலிமையை வழங்கிவருகிறது.
இனி அடுத்த வாரம் புஷ்கராம்ச நட்சத்திரப் பாதத்தை பயன்படுத்தி எப்படி ஒருவர் விதியை வெல்வது என்பதைக் காணலாம்.
(தொடரும்)
செல்: 98652 20406
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2024-03/pushkaram-t.jpg)